"Your family doctor at your fingertips !"

eDoctor.lk - New era in social media (Tamil Translation)

www.edoctor.lk  – இலங்கையில் சமூக வலையமைப்பினூடாக புதிய சகாப்தத்தின் ஆரம்பம்
இலங்கையின் வைத்தியர்களின் நேரடி தொடர்பு
என்பது ஓரு முக்கிய அம்சமாகும். சில வருடங்களுக்கு முன் சமூக வலையமைப்பின் ஊடாக வைத்தியர்களை
அணுகுவது ஒரு கனவாகவே கருதப்பட்டது. ஆனால் இன்று இது நனவாகியுள்ளது. www.edoctor.lk  அர்ப்பணிப்பான ஒரு வைத்தியர்கள் குழுவினரால் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வைத்திய குழுவினரின் பொறுப்புக்கூறலும் அர்ப்பணிப்பான சேவையுமே இணையத்தள  eDoctor.lk  கான  வழியை சமைத்துக்கொடுத்தது. இது ஒரு சாதனை மாத்திரமன்று, குறுகிய காலத்தில் இலங்கையின் சமூக வலையமைப்பில் மிக மிக பிரசித்தமாகியுள்ளது.

சமூக வலையமைப்பகளான முகப்புத்தகம், டுவிட்டர், லின்க்டின், கூகுள் பிளஸ் ஆகியன இலங்கை இளைஞர்கள் மத்தியிலே மிகவும் பிரசித்தமானவையாகும். கடந்த சில மாதங்களில் eDoctor இளைஞர்கள் மத்தியிலே, இச்சமூக வலைபின்னல்கள் ஊடாக கல்வி சம்பந்தமான நிலையில் ஏற்படும்  வெ வ்வேறு சுகநல விளைவுகள். பற்றி அதிகமான விழிப்பூட்டுல்களை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நாட்களில் சமூக வலையமைப்புக்கள் புரளிகள், புகைப்படங்கள், பாலுணர்வை தூண்டுகின்ற செய்திகள் என்பவற்றையே பகிர்ந்து கொள்வதனால் இளைஞர்கள் கணணிகளுக்கு முன் மணித்தியாலக் கணக்காக அமர்ந்திருந்து வீணாக நேரத்தை செலவிடுகின்றனர். edoctor இனால் இவ்வாறான சமூக வலையமைப்பில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்த முடிந்துள்ளது. சுகநல துளிகளை தாங்கிய விளம்பரங்களை இலங்கை வைத்தியர்கள் வடிவமைத்து இவ்வாறான பிரபலமான பக்கங்களில் காட்சிப்படுத்தியுள்ளனர். எனவே மக்கள் வீணாக நேரத்தை கழிக்கும் பொழுது சில விநாடிகள் இவ்வாறான சுகநல துளிகளை தாங்கிய விளம்பரங்களை வாசித்து தமது அறிவை தற்காலப்படுத்திக் கொள்வதோடு இன்றைய சுகநல விளைவுகள் பொதுவான சுகாதார நிபந்தனைகளையும் அறிந்து கொள்ள முடியும். வாராந்தம் வெளியிடப்படும் செய்திமடல்கள் இளைஞர்களை கவர்ந்திழுப்பதோடு இவற்றை வாசிப்பதன் மூலமாக சுகநல விழிப்புணர்வை இவ்விளைஞர்கள் மத்தியில் கட்டியெழுப்ப முடியும். edoctor   முகப்புத்தக விசிறிகளின் பக்கமானது  சுகநல புதிர்கள், குறுக்கெழுத்து போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியது. சுகநலம் இளைய தலைமுறையினர் மத்தியில் பிரபலமான தலைப்பாக அமையாவிட்டாலும், இத்தகைய செயற்பாடுகள் இவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இவர்களை இவ்வாறான புதிர், போட்டிகள் போன்றவற்றில் பங்கு பெறச் செய்வதன் மூலமாக தானாகவே அவர்களது சுகாதார அறிவை மேம்படுத்துகின்றது.

www.edoctor.lk இணையத்தளமானது பெறுமதிமிக்க சுகாதாரம் சம்பந்தமான கட்டுரைகளை கொண்டுள்ளதோடு இக்கட்டுரைகளின் நுழைவானது மிகவும் பிரபலமாகிக்கொண்டு வருவதாக 'அலக்ஸா' இணையத்தள புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இலங்கை பொது மக்கள் இதனை பதிவிரக்கம் செய்யாமல் நேரடியாகவே இணையத்தளத்தில் வாசித்து அறிந்து கொள்ள முடியும். இக்கட்டுரைகள் பிரசித்தமான சமூக தொடர்பாடல் இணையத் தளங்களுக்கும் பகிரப்பட்டுள்ளது. எனவே இளம் தலைமுறையினர் இக் கட்டுரைகளை பார்வையிட்டு அறிந்து கொள்வதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளதோடு, தற்போது மிகக்குறைவாகவுள்ள முறையான சுகாதாரக் கல்வி பற்றிய தெளிவை அவர்களிடம் ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. eDoctor மகுட வாசகத்திற்கமைவாக 'சிறந்த நாளைய தினத்திற்கான ஆரோக்கிய வாழ்வு' ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவுதே இறுதி இலக்காகும்
eDoctor YouTube அலைவரிசை சமூக வலையமைப்பானது நவீன பதிப்பாகும். இதில் பல விதமான வீடியோக்களை பார்ப்பது மக்களுடைய பழக்கமாகும். இலங்கைப் பொது மக்களுக்கு பொருத்தமான சுகாதார சம்பந்தமான வீடியோக்களை இணையத்தில் பதித்துள்ளதன் மூலமாக ஒரு சிறு விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த வீடியோக்களில் சரியான சுகாதார செய்திகள் மிக கவர்ச்சிகரமாக எங்கும் பரவக்கூடிய வகையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையர் மத்தியில் உலகமயமான சுகாதார இணையத்தளங்கள் பிரபல்யமாகவுள்ளன. ஆனால் அவை இலங்கை மக்களின் வாழ்க்கை முறைக்கும் சுகநல தேகாரோக்கியத்திற்கு பொறுத்தமானவையல்ல. edoctor க்கு நன்றி, எங்களுக்குச் சொந்தமான தமிழ் மொழியிலான உள்ளுர் இணையத்தளம்www.edoctor.lk  இருக்கும்போது இலங்கையர்கள் வெளிநாட்டு இணையத்தளங்களை பார்வையிடத் தேவையில்லை.

0 comments:

Post a Comment